பாக்முத் நகரை கைப்பற்ற தாக்குதலை தீவிரப்படுத்தும் ரஷ்யா.! - Seithipunal
Seithipunal


உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையேயான போர் கடந்த வருடம் பிப்ரவரி மாதம் முதல் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் ரஷ்யா உக்ரைனின் கிழக்கு பகுதிகளை கைப்பற்றுவதற்கு தீவிரம் காட்டி வருகிறது. மேலும் கார்கிவ், லுஹான்ஸ்க் மற்றும் டொனெட்ஸ்க் பகுதிகளில் அதிக அளவு படைவீரர்களை ரஷ்யா குவித்து வருகிறது.

இது தொடர்பாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், ரஷ்ய படையினர் பாக்முத் நகரைக் கைப்பற்றும் முயற்சியை தீவிரப்படுத்தி அதற்கான தாக்குதலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாக்முத் நகரின் வடக்கு பகுதியான பராஸ்கோவீவ்காவில் ரஷ்யா ஏவுகணை தாக்குதலில் ஈடுபட்டு வருவதால் நிலைமை மோசமாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இது குறித்து டொனெட்ஸ்க் மாகாண கவர்னர் பாவ்லோ கிரிலென்கோ கூறும்பொழுது, பாக்முத் பகுதியில் ரஷ்யா படைகளை எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், தாக்குதலை தீவிரப்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளார். டொனட்ஸ்க் பகுதியில் கனிம வள தாதுக்கள் நிறைந்த சோலாடர் நகரத்தை ரஷ்யா கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Russia intensifies attack to capture Bakhmut


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->