இரவு முழுவதும் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்.! அணுமின் நிலையத்தில் மின்சாரம் துண்டிப்பு.!!
Russia missile attack cut power at Zaporizhzhia nuclear plant
ரஷ்யா-உக்ரைன் போர் கடந்த ஓராண்டுக்கு மேலாக தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், உக்ரைனின் கிழக்கு பகுதிகளை கைப்பற்றும் முயற்சியில் ரஷ்யா தீவிர தாக்குதலை நடத்தி வருகிறது. இதில் உக்ரைனில் இரவு முதல் தொடர்ந்து ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த தொடர் ஏவுகணை தாக்குதல்கள் வடக்கில் கார்கிவ் முதல் தெற்கில் ஒடேசா மற்றும் மேற்கில் சைட்டோமிர் வரையிலான நகரங்களைத் தாக்கியுள்ளன. இதில் கார்கிவ் மற்றும் ஒடேசாவில் குடியிருப்பு கட்டிடங்கள் மற்றும் உள்கட்டமைப்புகள் மிகுந்த சேதமடைந்த நிலையில், பல பகுதிகளில் மின்சாரம் தடைபட்டுள்ளது.
மேலும் ஜாபோரிஜியா அணுமின் நிலையத்திற்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டு, தற்போது டீசல் ஜெனரேட்டர்களில் அணுமின் நிலையம் இயங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி, ரஷ்யா தனது மோசமான தந்திரோபாயங்களை மீண்டும் தொடங்கியது என்றும், இது ஒரு கடினமான இரவு என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Russia missile attack cut power at Zaporizhzhia nuclear plant