வெறும் வயிற்றில் செவ்வாழைப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!
Benefits of Eating Bananas on an Empty Stomach
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
-
- செவ்வாழைப்பழத்தில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால், நோய் எதிர்ப்பு சக்தி மேம்பட்டு, உடலை தொற்று நோய்களிலிருந்து பாதுகாக்க உதவும்.
-
உடலில் உடனடி ஆற்றல் கிடைக்கும்
- செவ்வாழைப்பழத்தில் இருக்கும் சுக்ரோஸ், குளுக்கோஸ் போன்ற இயற்கை சர்க்கரைகள் உடனடி ஆற்றலை அளிக்கும். உடற்பயிற்சி செய்யும் முன் இதை சாப்பிட்டால் மிகப்பெரிய நன்மை கிடைக்கும்.
-
கண் ஆரோக்கியத்திற்குத் தேவையானவை
- செவ்வாழைப்பழத்தில் உள்ள கரோட்டினாய்டுகள், பீட்டா கரோட்டின் கண் பார்வையை மேம்படுத்தி, வயதுவரும் கண் பிரச்சனைகளைத் தடுக்க உதவும்.
-
எடையைக் குறைக்க உதவும்
- இதில் உள்ள நார்ச்சத்து நீண்ட நேரம் பசியை கட்டுப்படுத்தி, அதிக உணவு சாப்பிடுவதைத் தடுக்கின்றன. இதனால் எடையை எளிதாகக் குறைக்க முடியும்.
-
மனநிலையை மேம்படுத்தும்
- செவ்வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் B6 ஹார்மோனாகிய செடோடோனின் உற்பத்தியை அதிகரித்து மனநிலையை சீராக்கி, மனச்சோர்வினைப் போக்க உதவுகிறது.
-
நாள்பட்ட நோய்களைத் தடுக்கும்
- செவ்வாழைப்பழத்தில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் செல்கள் சேதத்தை தடுத்து, புற்றுநோய் போன்ற நோய்களின் அபாயத்தை குறைக்கும்.
-
சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும்
- செவ்வாழைப்பழத்தில் இருக்கும் வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் சருமத்தில் கொலாஜன் உற்பத்தியை அதிகரித்து, பளபளப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைக்கின்றன.
எதிர்மறையான விளைவுகளைத் தவிர்க்க
- அளவுக்கு அதிகமாக செவ்வாழைப் பழத்தை சாப்பிடக்கூடாது.
- ஒரு நாளுக்கு ஒரு பழம் மட்டும் போதுமானது.
- வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் மட்டுமே இந்த நன்மைகள் உண்டாகும்.
தொடர்ந்து ஒரு வாரம் செவ்வாழைப்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிட்டால், உடல் ஆரோக்கியத்தில் பாரிய மாற்றங்களை நீங்கள் காணலாம்.
English Summary
Benefits of Eating Bananas on an Empty Stomach