ஜெர்மனி தூதர்கள் வெளியேற்றம்.! ரஷ்யா அதிரடி உத்தரவு.! - Seithipunal
Seithipunal


கடந்த ஆண்டு ரஷ்யா, உக்ரைன் மீது போர் தொடுத்ததை எதிர்த்து மேற்கத்திய நாடுகளும், ஐரோப்பிய நாடுகளும் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதித்தன. மேலும் தங்கள் நாடுகளிலிருந்து ரஷ்ய தூதர்களை வெளியேற்றி கடும் கண்டனத்தை வெளிப்படுத்தின. இருப்பினும், போரை நிறுத்துவதற்காக ஐநா மற்றும் உலக நாடுகள் மேற்கண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.

இந்நிலையில், உக்ரைன் போரை எதிர்த்து ரஷ்ய தூதர்களை தனது நாட்டிலிருந்து வெளியேற்றி ஜெர்மனி ரஷ்யாவிற்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. இதற்கு பதிலடியாக ரஷ்யாவும் தனது நாட்டிலிருந்து 20க்கும் மேற்பட்ட ஜெர்மன் தூதர்களை வெளியேற்ற போவதாக அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் கூறும் பொழுது, ஜெர்மனி தூதர்களின் எண்ணிக்கையை படிப்படியாக குறைத்துக் கொள்வதற்கான அறிவிப்பை ஜெர்மனி தூதர் கிசா ஆண்ட்ரியாஸ் வான் கெய்ரிடம் தெரிவித்ததாகவும், ஜெர்மனி, ரஷ்யா இடையேயான உறவுகளை ஜெர்மனி அழிக்க நினைப்பதாக தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து ஜெர்மனியின் தூதர்களை வெளியேற்றும் நடவடிக்கை நீண்ட நாள் பகையை வெளிப்படுத்துவதாக தெரிவித்துள்ளார். மேலும் ஜெர்மனி தனது எரிபொருள் தேவைக்காக ரஷ்யாவையே பெரும்பாலும் சார்ந்திருக்கும் நிலையில், ஜெர்மனியின் நடவடிக்கை பெரும் தவறானது என குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Russia ordered Germany diplomats to go out of russia


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->