இந்தியாவிற்கு குடியரசு தின வாழ்த்து தெரிவித்த அதிபர் புதின்..! - Seithipunal
Seithipunal


ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் 26 ஆம் தேதி நாட்டில் குடியரசுத் தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று நாடு முழுவதும் 74-வது குடியரசு தின விழா மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

இந்த விழாவை மிக பிரமாண்டமாக கொண்டாடுவதற்கு நாட்டின் தலைநகரான டெல்லியில் மிகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு பாதுகாப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் இன்று மிக சிறப்பாக கொண்டாடப்படும் இந்த விழாவிற்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் தனது குடியரசு தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 

"தயவு செய்து குடியரசு தின வாழ்த்துகளை ஏற்று கொள்ளுங்கள். பொருளாதார, சமூக, அறிவியல், தொழில் நுட்பம் உள்ளிட்ட பல தளங்களில் இந்தியாவின் சாதனைகள் பரவலாக அறியப்பட்டவை ஆகும். உங்களுடைய நாடு சர்வதேச நிலை தன்மையை உறுதி செய்வதில் பெருமளவில் பங்காற்றி வருகிறது. 

இதேபோல் மண்டல மற்றும் சர்வதேச செயல்திட்டங்களில் முக்கிய விவகாரங்களை குறித்து பேசுவதில் இந்தியா பெரும் பங்கு வகிக்கிறது. நாம் இணைந்து பணியாற்றுவதன் மூலம் அனைத்து துறைகளிலும், பரஸ்பர நன்மை பயக்கும். அதுமட்டுமல்லாமல் இருதரப்பு ஒத்துழைப்பின் தொடர்ச்சியான வளர்ச்சியை நாம் உறுதி செய்ய முடியும் என்று நான் நம்புகிறேன். 

ரஷியா மற்றும் இந்தியா என்று இரண்டு நாடுகளின் நட்பு ரீதியிலான மக்களின் அடிப்படை நலன்களை சந்தேகம் இல்லாமல் அது பூர்த்தி செய்யும்" என்று புதின் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

russia president putin wishes t india for republic day


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->