சலுகை விலையில் கச்சா எண்ணெய்.! பாகிஸ்தானுக்கு வழங்க ரஷ்யா மறுப்பு.! - Seithipunal
Seithipunal


ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர் கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளது.

மேலும் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை பல நாடுகள் நிறுத்திக் கொண்டதால் ரஷ்யா நஷ்டத்தினை தவிர்க்கும் வகையில் சலுகை விலையில் கச்சா எண்ணெய் வழங்குவதாக அறிவித்து, இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வாங்கி வருகின்றது.

இந்நிலையில் சலுகை விலையில் கச்சா எண்ணெய் பாகிஸ்தானுக்கும் கொடுக்க வேண்டும் என அந்நாடு ரஷ்யாவிடம் கோரிக்கை விடுத்தது. மேலும் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் பிரதிநிதிகள் 3 நாள் பயணமாக மாஸ்கோ சென்று, கடந்த 29ஆம் தேதி தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வதற்கான சாத்தியக்கூறுகள், கட்டணம் செலுத்தும் முறை மற்றும் ஏற்றுமதி செலவு பற்றி இருதரப்பும் விவாதித்தனர். 

இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் பாகிஸ்தான் பெட்ரோலிய துறை மந்திரி முசாதிக் மாலிக், இணைச் செயலர் மற்றும் மாஸ்கோவில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் ஆகிய பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், பாகிஸ்தானுக்கு 30-40 சதவீத தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வழங்க ரஷ்யா மறுத்துவிட்டதாக தி நியூஸ் இன்டர்நேஷனல் செய்தி வெளியிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Russia refuses to supply crude oil to Pakistan at discount price


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->