உக்ரைனுக்கு ராணுவ பீரங்கி வழங்கிய போலந்து.! கச்சா எண்ணெய் விநியோகத்தை நிறுத்திய ரஷ்யா.!
Russia stopped crude oil supply to Poland as it gives tanks to ukraine
ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையே போர் தொடங்கி ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இப்போரில் மேற்கத்திய நாடுகளும், ஐரோப்பிய நாடுகளும் உக்ரையனுக்கு ஆயுதங்களை வழங்கி ஆதரவு தெரிவித்து வருகின்றன. மேலும் உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்துள்ளன.
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை உக்ரைன் தலைநகர் கீவ்விற்கு பயணம் மேற்கொண்ட போலந்து பிரதமர் மெடூசி மொரவிஹி, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸியை சந்தித்து பேசினார். அப்பொழுது போலந்தும், ஐரோப்பாவும் உங்கள் பக்கம் நிற்கிறோம். ரஷ்யாவை முழுமையாக வெல்லும் வரை நாங்கள் உக்ரைனை ஆதரிப்போம் என்று தெரிவித்திருந்தார்.
மேலும் உக்ரைனுக்கு இதுவரை 4 லியோபேர்ட் பீரங்கிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், கூடுதல் ஆயுதங்கள் விரைவாக அனுப்பப்படும் என்று தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து போலந்தின் இந்த நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ட்ருஷ்பா குழாய் வழியாக போலந்திற்கு செல்லும் கச்சா எண்ணெய் விநியோகத்தை ரஷ்யா அதிரடியாக நிறுத்தியுள்ளது.
உக்ரைனுக்கு லியோபேர்ட் பீரங்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் வழங்கியதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலந்து சுத்திகரிப்பு நிறுவனத்தின் தலைமை நிர்வாகி பிகேஎன் ஆர்லன் தெரிவித்துள்ளார். மேலும் ரஷ்யாவின் இந்த நடவடிக்கையால் போலாந்தில் கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
English Summary
Russia stopped crude oil supply to Poland as it gives tanks to ukraine