வெற்றிகரமாக "புதிய ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு ராக்கெட்டை" சோதனை செய்தது ரஷ்யா.! - Seithipunal
Seithipunal


ரஷ்யா (வெள்ளிக்கிழமை) இன்று புதிய ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு ராக்கெட்டை சோதனை செய்ததாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர் கடந்த 9 மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் நிதி உதவிகளையும், ஆயுதங்களையும் வழங்கி ஆதரவு தெரிவித்து வருகின்றது. 

இந்நிலையில் போரில் ரஷ்ய படைகள் கைப்பற்றிய முக்கிய நகரங்களை மீண்டும் உக்ரைன் படைகள் கைப்பற்றியுள்ளதால், ரஷ்ய படைகள் தீவிரத் தாக்குதல் ஈடுபட்டுள்ளது. மேலும் ரஷ்யா தனது ராணுவ பலத்தை அதிகரிக்கும் முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. 

இதில் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட புதிய ஏவுகணை தடுப்பு அமைப்பைக் கொண்ட ராக்கெட்டை வெற்றிகரமாக கஜகஸ்தானில் உள்ள சாரிஷாகன் ஏவுதளத்தில் இருந்து இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Russia Successfully Tests New Missile Defence System Rocket


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->