ரஷ்யா - உக்ரைன் போர் : கைதிகள் பரிமாற்றத்தில் சொந்த ஊருக்கு சென்ற 100 ராணுவ வீரர்கள்.! - Seithipunal
Seithipunal


கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் ரஷியா மற்றும் உக்ரைனுக்கு இடையே போர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், இரு நாட்டை சேர்ந்த ஏராளமான வீரர்கள் உயிரிழந்துள்ளனர். அவர்களில் சிலர் சிறை பிடிக்கப்பட்டு, விடுவிக்கவும் செய்யப்படுகின்றனர். 

இந்நிலையில், ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் செய்திக்குறிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது. அதில், "ரஷியா மற்றும் உக்ரைனுக்கு இடையே கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திலிருந்து நடைபெற்று வரும் போரின் ஒரு பகுதியாக சிறை கைதிகள் பரிமாற்றத்தின்படி, உக்ரைனால் சிறை பிடிக்கப்பட்ட ஐம்பது ரஷிய ராணுவ வீரர்கள் சொந்த நாட்டுக்கு திரும்பியுள்ளனர். 

இரு நாடுகளுக்கிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையின் படி, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது முப்பத்தாறாவது கைதிகள் பரிமாற்ற நிகழ்வு ஆகும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதைத்தொடர்ந்து, உக்ரைன் நாட்டு அதிபரின் அலுவலக தலைவர் ஆண்டிரி எர்மேக் தெரிவித்ததாவது, "ரஷியாவால் கைதிகளாக சிறை பிடிக்கப்பட்ட ஐம்பது  உக்ரைன் ராணுவ வீரர்கள் நாட்டுக்கு திரும்பியுள்ளனர்" என்றுத் தெரிவித்துள்ளார். 

இதன்படி, செர்னோபில் அணு உலை, செர்னிவ், டோனெட்ஸ்க், மரியுபோல், கெர்சன், கீவ் மற்றும் பிற பகுதிகளில் பிடிபட்ட வீரர்கள் உக்ரைனுக்கு திரும்பி வந்துள்ளனர் என்று அறிக்கை தெரிவிக்கின்றது. இது கடைசி பரிமாற்றம் இல்லை. எங்களுடைய அனைத்து மக்களையும் திரும்ப பெறும் பணி தொடர்ந்து நடைபெறும். 

அதனை நாங்கள் நிறைவேற்றுவோம்" என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், ரஷியா அறிவித்திருந்த போர்நிறுத்த ஒப்பந்தம் கடந்த சனி கிழமை நள்ளிரவுடன் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, கார்கிவ் நகரிலுள்ள மெரீபா பகுதியின் மீது இரண்டு ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பொதுமக்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

russia ukraine hundrad prisoners returned home


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->