ஆயுதங்களை கீழே வைத்து விட்டு சரணடைய வேண்டும் - உக்ரைன் வீரர்களுக்கு ரஷ்யா கடும் எச்சரிக்கை.! - Seithipunal
Seithipunal


ரஷ்யா-உக்ரைன் நாடுகளுக்கு இடையே கடந்த 55  நாட்களாக போர் நடைபெற்று வருகிறது. இந்தப் போரில் ரஷ்ய படைகள் உக்ரைனில் உள்ள முக்கிய நகர் பகுதிகளை முற்றுகையிட்டு தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் உக்ரைனில் முக்கிய நகரத்திற்குள் இருக்கும் வீரர்கள் தங்களுடைய ஆயுதங்களை கீழே வைத்து விட்டு உடனடியாக சரணடைய வேண்டும் என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ரஷ்ய பாதுகாப்பு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,

"உக்ரைன் ராணுவம் அவர்கள் நாட்டு அதிகாரிகளிடம் இருந்து உத்தரவு வரும் என்று நம்பி ரஷ்யா முற்றுகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சண்டையிடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 

உக்ரைன் நாட்டு அதிகாரிகள் எவ்வித உத்தரவையும் பிறப்பிக்கப் போவதில்லை. எனவே உடனடியாக உங்களது ஆயுதங்களை கீழே வைத்து விட்டு சரணடைய வேண்டும்". என்று ரஷ்ய பாதுகாப்பு துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Russia Ukraine War 55th day


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->