உக்ரைனின் பாக்முத் நகரை கைப்பற்றி கொடியை நாட்டியது ரஷ்ய கூலிப்படை அமைப்பு..! - Seithipunal
Seithipunal


உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையேயான போர் ஓராண்டுக்கு மேலாக நடைபெற்று வரும் நிலையில், உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் கிழக்கு நகரங்களை கைப்பற்றுவதற்கு பாக்மூட் பகுதியில் ரஷ்ய படைகள் தீவிரமாக தாக்குதல் நடத்தி வந்தனர்.

இந்நிலையில் உக்ரைனின் முக்கிய நகரமான பாக்முட் பகுதியை கைப்பற்றி விட்டதாக ரஷ்யாவின் வாக்னர் கூலிப்படை குழுவின் நிறுவனர் எவ்ஜெனி பிரிகோஜின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வாக்னர் கூலிப்படை நிறுவனர், தொழில்நுட்ப முறையில் பாக்முட் நகரத்தில் மத்திய மாவட்டம் மற்றும் முக்கிய பகுதிகளை கைப்பற்றி விட்டோம் எனவும் ஏப்ரல் இரண்டாம் தேதி 11 மணிக்கு சிட்டி ஹால் பகுதியில் ரஷ்யாவின் குடியை நாட்டிவிட்டோம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் ரஷ்யா கொடியானது பீட்டர்ஸ்பேர்க் குண்டுவெடிப்பில் உயிரிழந்த விளாட்லென் டாட்டர்ஸ்கைக்காக நடப்பட்டுள்ளது என்றும், பாக்முட் தெற்குபகுதியை நோக்கி தொடர்ந்து முன்னேறவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Russia Wagner gang captured bakhmut and planted flag


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->