நேட்டோவில் உக்ரைன் இணைந்தால் மூன்றாம் உலகப்போர் ஏற்படுவது உறுதி - ரஷ்யா எச்சரிக்கை - Seithipunal
Seithipunal


நேட்டோவில் உக்ரைன் இணைந்தால் மூன்றாம் உலகப் போர் ஏற்படுவது உறுதி என்று ரஷ்ய எச்சரிக்கை விடுத்துள்ளது.

நேட்டோ கூட்டமைப்புடன் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா, அந்நாட்டின் மீது கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி முதல் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்த நிலையில், 8 மாதங்களாக போர் நீடித்து வருகிறது.

இந்நிலையில், ரஷ்ய பாதுகாப்பு கவுன்சிலின் துணைச் செயலர் அலக்ஸாண்டர் வெனடிக்டோவ் டாஸ் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்ததில்,

உக்ரைன் நேட்டோ இராணுவக் கூட்டணியின் விரைவான உறுப்பினருக்கான ஒரு ஆச்சரியமான முயற்சியாக விண்ணப்பம் செய்துள்ளது. இது நிச்சயமாக போரை உக்கிரமாக்கும் என்று ஆட்சியாளர்களுக்கு தெரியாமல் இருக்காது. இருந்தும் உக்ரைன் இவ்வாறு செய்துள்ளது.

இதற்கிடையில், உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகளும் தொடர்ந்து பல்வேறு உதவிகளைச் செய்துவருகின்றன. மேலும் மேற்கத்திய நாடுகள் உதவி செய்து ரஷ்யாவுக்கான நேரடி களப் போட்டியாளராக உருவெடுத்து வருகின்றன.

உக்ரைனுக்கு தங்கள் கூட்டமைப்புக்குள் இடம் தருவது என்பது தற்கொலைக்கு சமமானது என்று நேட்டோ நாடுகளுக்கே தெரியும். ரஷ்யா தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறது. அமெரிக்கா தலைமையிலான நேட்டோ இராணுவக் கூட்டணியில் உக்ரைன் இணைந்தால், உக்ரைனில் மோதல்கள் மூன்றாம் உலகப் போராக அதிகரிக்கும் என்பது உறுதி என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Russia warns that if Ukraine joins NATO the third world war will surely occur


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->