ரஷ்யா உக்ரைன் போர் : ரஷ்ய தாக்குதலில் இதுவரை 97 குழந்தைகள் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


உக்ரைனில் ரஷ்ய நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 94 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

கனடா நாடாளுமன்றத்தில் அந்நாட்டு உறுப்பினர்களிடையே உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி காணொளி மூலம் பேசினார். அப்போது தங்கள் நாட்டுக்கு கனடா அளித்து வரும் ஆதரவிற்கு நன்றி தெரிவித்தார்.

உக்ரைனின் நகரங்கள் மீது ரஷ்யா அடுத்தடுத்து மனிதாபிமானமற்ற தாக்குதல்களை நடத்தி வருவதாக குற்றம் சாட்டிய உக்ரைன் அதிபர், ரஷ்யாவின் அத்துமீறல்களை ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்று கூறினார்.

உக்ரைன் சந்தித்து வரும் பாதிப்புகள் குறித்து பேசிய அவர் போரினால் உக்ரைனில் இதுவரை 97 குழந்தைகள் உயிரிழந்ததாக அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார். இந்த தகவல் உலக நாடுகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Russian attack 97 children's died in Ukraine


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->