உக்ரைன் தலைநகரில் வெடிகுண்டு வீச்சு.! பொதுமக்கள் வெளியேற்றம்.! - Seithipunal
Seithipunal


உக்ரைன் தலைநகரில் ரஷ்யப் படைகள் வெடிகுண்டு வீசி தாக்கியதால் அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் பிப்ரவரி மாதம் முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ரஷ்யப் படைகள் கிழக்கு பகுதிகளை கைப்பற்றும் முயற்சியில் தொடர்ந்து ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே சிவிரோடோனெஸ்க், டொனெஸ்க், லுஹான்ஸ்க் நகரங்களை கைப்பற்றிய நிலையில் உக்ரைனின் முக்கிய நகரங்களை கைப்பற்றும் முயற்சியில் ரஷ்யப் படைகள் தாக்கி வருகின்ற நிலையில் உக்ரைன் தலைநகர் கீவ் பகுதியில் ரஷ்யப் படைகள் வான்வழி மூலம் இன்று காலை நான்கு இடங்களில் குண்டுகள் வீசி உள்ளனர். 

இதில் விசப்பட்ட 4 குண்டுகளில் ஒரு குண்டு குடியிருப்பு பகுதிகளில் உள்ள கட்டிடங்களில் விழுந்து வெடித்ததால் கட்டிடங்கள் தீப்பிடித்து எரிந்ததுடன் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்துள்ளது.

இதனையடுத்து குடியிருப்பு பகுதியில் உள்ள பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

மேலும் மூன்று வாரங்களுக்கு பிறகு உக்ரைன் தலைநகர் கீவ் பகுதியில் ரஷ்ய படைகள் தாக்குதல் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Russian bombing on Kiev residential building


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->