ரஷ்யாவின் நாணயத்தைக் கொண்டு எரிவாயு வாங்காவிட்டால் ஒப்பந்தங்கள் ரத்து! புதின் எச்சரிக்கை.! - Seithipunal
Seithipunal


ரஷ்யாவிடம் இருந்து எரிவாயு வாங்கும் நாடுகள் ரஷ்ய நணயத்தைக் கொண்டு எரிவாயு வாங்காவிட்டால் அவற்றின் ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்படும் என ரஷ்ய அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், ரஷ்யாவின் ரூபிள் நாணயத்தைக் கொண்டுதான் எரிவாயு வாங்க வேண்டும் என்றும், ரூபிள் நாணயத்தை பயன்படுத்தாவிட்டால், அந்த ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த உத்தரவு ஏப்ரல் ஒன்றாம் தேதியான இன்று முதல் இது நடைமுறைக்கு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நடைமுறைக்காக ரஷ்ய வங்கிகளில் சிறப்பு கணக்கு தொடங்கப்படும், அவற்றின்மூலம் வெளிநாட்டு பணம் ரஷ்ய நணயமான ரூபிளாக மாற்றப்படும் எனவும் ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்தார்.

மேலும், யாரும் ரஷ்யாவுக்கு இலவசமாக பணம் தரவில்லை என்றும், நாங்கள் யாருக்கும் தொண்டு செய்யவும் போவதில்லை, எனவே ரஷ்ய நாணயங்களை ஏற்றுக்கொள்ளாத ஒப்பந்தங்கள் நிறுத்தப்படும் என்றும் புதின் தெரிவித்துள்ளார்.

ஜெர்மனி, இத்தாலி போன்ற ஐரோப்பிய நாடுகள், பெரிய அளவில் ரஷியாவின் எரிவாயுவை நம்பி இதுப்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Russian currency gas cylinder contract


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->