கெர்சன் பகுதியிலிருந்து மக்களை வெளியேற்றும் ரஷ்ய படைகள்.!
Russian forces asked to evict people from Kherson due to security concenrn
உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையேயான போர் கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி முதல் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், உக்ரைன் படைகள் ரஷ்ய கட்டுப்பாட்டிலிருந்து முக்கிய நகரங்களை மீண்டும் கைப்பற்றியுள்ளன.
இதையடுத்து இரண்டாம் கட்ட தாக்குதலை தொடர்ந்துள்ள ரஷ்யப்படைகள், உக்ரைன் கெர்சன் மாகாணத்தில் உள்ள பிரம்மாண்ட நோவா அணையை தகர்க்க முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில் கெர்சன் மாகாணத்தில் தாக்குதல் தீவிரமடைவதை கருத்தில் கொண்டு அப்பகுதி மக்களை வெளியேறுமாறு ரஷ்ய ஆதரவு ஆட்சியாளர்கள் உத்தரவிட்டுள்ளனர். மேலும் டெலிகிராம் சேவை மூலமாக ரஷ்ய ஆதரவு நிர்வாகம் இது தொடர்பாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் கெர்சன் பகுதியில் போர் பதற்றம் அதிகரித்து வருவதால், படகுகளைப் பயன்படுத்தி ரஷ்யக் கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ரஷ்யாவின் இந்த நடவடிக்கை, உக்ரைன் மக்களை மனித கேடயமாக பயன்படுத்தக்கூடும் என்று உக்ரைன் தரப்பில் எச்சரிக்கை விடுத்துள்ளது.
English Summary
Russian forces asked to evict people from Kherson due to security concenrn