பாகிஸ்தானுக்கு 1.2 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான கச்சா எண்ணெய்.! சவுதி அரேபியா அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


பாகிஸ்தானுக்கு 1.2 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான கச்சா எண்ணெய் வழங்குவதாக சவுதி அரேபியா அறிவித்துள்ளது.

அந்நிய செலவாணி பற்றாக்குறை, விலைவாசி உயர்வு, டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாய் மதிப்பில் ஏற்பட்டுள்ள சரிவு போன்றவற்றால் பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. இதனால் பாகிஸ்தான் மக்களும், இலங்கை மக்களைப் போல அத்தியாவசியத் தேவைகளுக்கு சிரமப்பட்டு வருகின்றனர்.

மேலும் சமீபத்தில் ஏற்பட்ட கனமழை வெள்ளம் பாகிஸ்தானில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து சவுதி அரேபியா, துருக்கி உள்ளிட்டா பல நாடுகள் பாகிஸ்தானுக்கு பல்வேறு உதவிகளை வழங்கி வருகின்றன. 

இந்நிலையில் பாகிஸ்தானுக்கு நிதி உதவி மற்றும் கச்சா எண்ணெய் வழங்குவதாக சவுதி அரேபியா அறிவித்துள்ளது. இதில் பாகிஸ்தானுக்கு 3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதியுதவியாகவும், 1.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிலான கச்சா எண்ணெய் உதவிகள் அடங்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Saudi Arabia announced US dollar worth of crude oil to Pakistan


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->