சவுதி அரேபியா: ஆப்கானிஸ்தானில் தூதரகத்தை மூடுவதாக அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் ஆட்சி அமைத்தபின், தனது ஷிரியா கொள்கையின்படி பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. இதனால் ஆப்கானிஸ்தானில் வெளிநாடுகளின் முதலீடு குறைந்து பொருளாதாரம் பின்தங்கியது. இந்நிலையில் சவுதி அரேபியா காபூலில் உள்ள தனது தூதரகத்தை மூடுவதாக அறிவித்துள்ளது.

தூதரக ஊழியர்கள் மற்றும் அமைச்சர்கள் அனைவரையும் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக செய்தி வெளிட்ட சவுதி அரேபியா, தாலிபான்களுக்கு சர்வதேச அளவில் இன்னும் அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றும், தூதரகம் மீது பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதால் தூதரகத்தை மூடுவதாக தெரிவித்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து காபுலில் உள்ள சவுதி தூதரக அதிகாரிகள் மீது கார் வெடிகுண்டு மூலம் தாக்குதல் நடத்த ஐ.எஸ்.ஐ.எஸ் திட்டமிட்டுள்ளது. மேலும் இந்த அச்சுறுத்தலினால் தூதராக அதிகாரிகளை உடனடியாக வெளியேற்றியதாக தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Saudi Arabia closes embassy in Afghanistan due to security reasons


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->