பாலஸ்தீனத்தை விட்டு இஸ்ரேல் வெளியேற வேண்டும்! சவுதி இளவரசர் எச்சரிக்கை.!! - Seithipunal
Seithipunal


இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாத தீர்வாதிகள் கடந்த மாதம் தாக்குதல் நடத்திய நிலையில் அதனை தொடர்ந்து இரு தரப்பிற்கும் இடையே போர் மூண்டது. சுமார் ஒரு மாதத்திற்கு மேலாக நீடிக்கும் இந்த போரால் பாலஸ்தீனியர்கள் 11 ஆயிரம் பேர் கொல்லப்பட்டதாகவும், 1200 இஸ்ரேலியர்கள் பலியாகி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

மனிதாபிமான அடிப்படையில் போரை நிறுத்த வேண்டும் என ஐநா சபையில் ஜோர்டான் அரசு தீர்மானம் கொண்டு வந்ததை இந்தியா புறக்கணித்த நிலையில் பெரும்பான்மை நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. ஆனால் ஐநா சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இஸ்ரேல் நிராகரித்துவிட்டது. மனிதாபிமான அடிப்படையில் போரை நிறுத்தினால் அது ஹமாஸ் வெற்றி பெற்றதாக மாறிவிடும் என தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் இஸ்ரேலியர்கள் பாலஸ்தீன பகுதிகளில் குடியமர்த்தப்படுவதற்கு அந்நாட்டு அரசு கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. மேலும் இதனை கண்டித்து ஐநா சபையில் தீர்மானம் கொண்டு வந்ததற்கு இந்தியா ஆதரவு தெரிவித்திருந்தது. 

இந்த நிலையில் இஸ்ரேல் தான் ஆக்கிரமித்து வைத்துள்ள பாலஸ்தீன பகுதிகளில் இருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என சவுதி  பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மான் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Saudi prince warning Israel must leave Palestine


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->