ரீல்ஸ் மோகத்தால் வந்த வினை - பரிதாபமாக உயிரிழந்த பள்ளி மாணவன்.!
school student died take reels in madhya pradesh
பிரபல சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போடுவதில் இளைஞர்கள் அதிகளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அப்படி ரீல்ஸ் எடுக்கும் போது சில அசம்பாவிதங்களும் நடைபெறுகிறது.
அந்த வகையில், மத்தியபிரதேசம் மாநிலத்தில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸை ரீக்ரியேட் செய்ய முயன்றபோது கழுத்தில் கயிறு இறுக்கி பள்ளி மாணவன் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்ஸ்டாகிராமில் தற்கொலை செய்து கொள்வது போல் வந்த ரீல்ஸை கரண் என்ற பள்ளி மாணவன் பார்த்து விட்டு இதே மாதிரி தானும் ரீல்ஸ் செய்து வெளியிட்டால் சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரலாகும் என்று நினைத்துள்ளார்.
அதன் படி தூக்கு மாட்டி தற்கொலை செய்வது போல நண்பர்களுடன் சேர்ந்து மாணவன் கரண் ரீல்ஸ் எடுத்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக கயிறு கழுத்தை இறுக்கியதால் கரண் மயங்கி விழுந்துள்ளார். இதைபார்த்த அவரது நண்பன் கரண் நடிப்பதாக நினைத்துள்ளனர்.
நீண்ட நேரமாகியும் கரண் எழுந்திரிக்காததால் அவரது நண்பர்கள் அந்த இடத்தை விட்டு ஓடியுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த காரனின் பெற்றோர் விரைந்து வந்து மகனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு, கரணை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் சம்பவ இடத்தில் ரீல்ஸ் எடுத்த செல்போனை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். ரீல்ஸ் மோகத்தால் பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
school student died take reels in madhya pradesh