பல வருடங்களுக்கு பிறகு வெளிவந்த எகிப்து மம்மியின் முகம்.!
scientist reconstrut face of egipth pregnent mummy
எகிப்து என்றாலே பிரமிடுகள் தான் நினைவிற்கு வரும். அங்கு, உயிரிழந்தவர்கள் மீண்டும் உயிர் பெற்று வருவார்கள் என்ற நம்பிக்கையில் அவர்களின் உடல்களை பதப்படுத்தி வைக்கும் வழக்கம் பின்பற்றப்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் பல நூறு வருடங்களுக்கு முன்னர் பதப்படுத்தப்பட்ட மம்மிகள் தொல் பொருள் ஆராய்ச்சியாளர்களுக்கு பல்வேறு ஆச்சரிய தகவல்களை அளித்து வருகின்றன. அந்த வகையில், தற்போது எகிப்தின் மர்ம பெண் என்று அறியப்பட்டு வந்த மம்மி ஒன்றின் முக வடிவத்தை ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர்.
பல நூறு வருடங்களுக்கு முன்பு எகிப்தில், அடையாளம் தெரியாத ஏழு மாத கர்ப்பிணி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவரது உடலில் உள்ள முக்கிய உறுப்புகளை எடுத்துவிட்டு குழந்தையை உடலின் வலப்பக்கத்தில் வைத்து, மம்மியாக பதப்படுத்தி வைத்துள்ளனர். இந்தப்பெண் எப்படி இறந்தார் என்ற தகவல் மட்டும் தெரிவிக்கப்படவில்லை.
இதையடுத்து, அந்த பெண்ணின் உடலைக் கைப்பற்றிய ஆராய்ச்சியாளர்கள், தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அவரின் முக வடிவத்தை வெளியிட்டுள்ளனர். இந்த முக வடிவத்தை ஆராய்ச்சியாளர்கள் 2டி - 3டி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வெளியிட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர்.
English Summary
scientist reconstrut face of egipth pregnent mummy