இரண்டாவது சர்வதேச கொரோனா மாநாடு! இன்று பிரதமர் மோடி பங்கேற்பு.! - Seithipunal
Seithipunal


இன்று நடைபெறும் சர்வதேச இரண்டாவது கொரோனா மாநாட்டில் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் பங்கேற்கிறார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஏற்பாடு செய்துள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பான இரண்டாவது சர்வதேச ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற உள்ளது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் காணொலிக் காட்சி மூலமாக பங்கேற்கிறார். இந்தக் கூட்டத்தில் கொரோனா பரவல் பாதிப்புகளுக்கு எதிராக சர்வதேச அளவில் சுகாதார கட்டமைப்பை மேம்படுத்துவது, நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவு உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் பற்றியும், இது தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுப்பது குறித்து ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

இதற்கு முன்பாக கடந்த ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி முதல் சர்வதேச கொரோனா மாநாடு காணொலிக் காட்சி மூலமாக நடைபெற்றது குறிப்பிடதக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Second International Corona Conference


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->