பட்டமளிப்பு விழாவில் நடந்த அதிர்ச்சி.! மாணவியுடன் வந்த நாய்க்கு டிப்ளமோ பட்டம்.!!
settan university provided diplomo convacation to dog in america
பட்டமளிப்பு விழாவில் நடந்த அதிர்ச்சி.! மாணவியுடன் வந்த நாய்க்கு டிப்ளமோ பட்டம்.!!
அமெரிக்கா நாட்டில் உள்ள நியூ ஜெர்சி மாநிலத்தில் உள்ள சவுத் ஆரஞ் பகுதியில் 1856ஆம் ஆண்டு முதல் செட்டான் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இது கத்தோலிக்க பல்கலைக்கழகம் என்று அறியப்படும். இந்த கல்வி நிறுவனத்தில் சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இந்த நிலையில் இந்தப் பல்கலைக் கழகத்தில் தற்போது பட்டமளிப்பு விழா நடைபெட்றது. அதில், செட்டான் பல்கலைக்கழகத்தில் இளங்கலை அறிவியல் பயின்று வரும் மாற்றுத்திறனாளியான கிரேஸ் மரியானிக்கு பட்டம் வழங்கப்பட்டது.
அப்போது கிரேஸ் கல்வி பயிலும் காலத்தில் அவருடன் வந்த அவரது செல்லப்பிராணியான ஜஸ்டின் என்ற நாய்க்கும் டிப்ளமோ பட்டம் அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டத்தை பல்கலைக்கழக தலைவர் ஜோசப், நாய் ஜஸ்டினின் வாயில் கொடுத்தார். அப்போது சுற்றியுள்ளவர்கள் ஆரவாரம் செய்து தங்கள் பெரு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இது தொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளதாவது:- "கிரேசி உடன் அனைத்து வகுப்புகளிலும் கலந்து கொண்ட நாயின் அர்ப்பணிப்பை பாராட்டுவதற்காக இந்த முடிவை பல்கலைக்கழகம் எடுத்துள்ளது" என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
settan university provided diplomo convacation to dog in america