ஆப்கானிஸ்தான் : வெடிக்காத பீரங்கி குண்டுகளால் 700 குழந்தைகள் பலியான சோகம்.! - Seithipunal
Seithipunal


ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான்கள் ஆட்சி நடந்து வருகிறது. அவர்கள் நாட்டில் பல புதிய கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளனர். இதனால், அந்நாட்டில் வறுமை மற்றும் வேலையின்மை ஏற்பட்டு மக்கள் அதிக சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். 

இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டிற்கான யூனிசெப் அமைப்பு டுவிட்டரில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில், "கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்ற போரில் பயன்படுத்தப்பட்டு தற்போது வரை வெடிக்காத நிலையில் உள்ள குண்டுகள் மற்றும் வெடிபொருட்கள் போன்றவற்றால் சுமார் 700-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். 

கடந்த வாரம், மட்டும் வெடிக்காத குண்டுகளால் எட்டு பேர் உயிரிழந்தனர். அவர்கள் அந்த வெடிக்காத குண்டை எடுத்து விளையாடியபோதும், அதில் உள்ள உலோகத் துண்டுகளை எடுத்து விற்பனை செய்வதற்காக சேகரித்தபோதும் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. 

இது குறித்த விவரங்கள் பொதுமக்களுக்கு தெரிவதில்லை. நாட்டில், நில கண்ணிவெடிகள், வெடிக்காத பீரங்கி குண்டுகள், வெடிகுண்டுகள் மற்றும் அதுபோன்ற பிற ஆயுதங்களால், குழந்தைகள் உள்பட பலர் சிக்கி உயிரிழந்து வருகின்றனர்" என்றுத் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

seven hundrad childrens died in afganisthan


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->