ஜெர்மனி : கிறிஸ்தவ வழிபாட்டு தளத்தில் துப்பாக்கிச் சூடு - 7 பேர் பலி.! - Seithipunal
Seithipunal


மத்திய ஐரோப்பாவின் தனித்துவமான பிராந்தியமான ஜெர்மனி நாட்டின் ஹம்பர்க் நகரில் கிறிஸ்தவ மத வழிபாட்டு தலம் ஒன்று உள்ளது. இந்த வழிபாட்டு தலத்தில் பிரார்த்தனை மற்றும் ஆலோசனை கூடம் உள்ளது. 

இந்த நிலையில், இந்த வழிபாட்டு தலத்திற்குள் நேற்று மர்ம நபர் ஒருவர் நுழைந்து அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினார். அதில் ஏழு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர். 

இதையடுத்து, அங்கிருந்தவர்கள் சம்பவம் குறித்து போலீசாருக்குத் தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் படி, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அங்கு துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், உயிரிழந்தவர்களின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியது யார்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர். இதைத்தொடர்ந்து அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

seven peoples died for gun shoot in germany


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->