உலுக்கும் அதிர்ச்சி!...துப்பாக்கிச் சூட்டிற்கு 20 சுரங்கத் தொழிலாளர்கள் பலி! - Seithipunal
Seithipunal


பாகிஸ்தானில் உள்ள பலூசிஸ்தான் மாகாணத்தில் செயல்பட்டு வரும் பலூசிஸ்தான் விடுதலை ராணுவம் கிளர்ச்சிக்குழு அங்குள்ள பொதுமக்கள், போலீசார் என பல்வேறு தரப்பினரை குறிவைத்து அவ்வப்போது பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள துகி பகுதியில் நிலக்கரி சுரங்கம் இயங்கி வருகிறது. இந்த சுரங்கத்தில் இன்று காலை தொழிலாளர்கள் வழக்கம் போல் வேலை செய்து கொண்டிருந்துள்ளனர்.

அப்போது, அங்கு துப்பாக்கியுடன் வந்த ஒருவர், வேலை செய்துகொண்டிருந்த தொழிலாளர்கள் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். இந்த துப்பாக்கி சூட்டில் 20 பேர் உயிரிழந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த துப்பாக்கி சூட்டில் 8 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாதுகாப்பு படையினர், படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிக்சைக்காக அனுமதித்தனர். மேலும், துப்பாக்கி சூடு நடத்திவிட்டு தப்பியோடிய நபரை தேடி வரும் நிலையியில், துப்பாக்கி சூடு நடத்தியவர் பலூசிஸ்தான் கிளர்ச்சி குழுவை சேர்ந்தவர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Shocking 20 miners killed in firing


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->