இங்கிலாந்தில் இரண்டு இந்திய வம்சாவளியினருக்கு சிறை தண்டனை - கரணம் என்ன? - Seithipunal
Seithipunal


காரில் சட்ட விரோதமாக மறைத்து வைத்து இந்திய அகதிகளை இங்கிலாந்திற்குள் அழைத்து வந்த இரண்டு இந்திய வம்சாவளியினருக்கு சிறை தண்டனை வித்து லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இங்கிலாந்து நாட்டில் வசித்து வருபவர் பல்விந்தர் சிங் புல். இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரான இவர் கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் டோவர் பகுதியில்  காரில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது அவரை எல்லை பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்தி உள்ளனர்.

அதன் பின்னர், பாதுகாப்பு படையினர் அவரது காரை சோதனை செய்தனர். அதில், காருக்குள் மறைத்து வைத்து சட்டவிரோதமாக இந்திய அகதிகள் மூன்று பேரை இங்கிலாந்துக்குள் அழைத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் பல்விந்தர் சிங்கை கைது செய்தனர். 

இந்த சம்பவம் நடந்த அடுத்த சில நாட்களிலேயே அதே டோவர் நகரில் மற்றொரு இந்திய வம்சாவளியான ஹர்ஜித் சிங் தலிவால் என்பவர் நான்கு இந்திய அகதிகளை காரில் மறைத்து வைத்து சட்ட விரோதமாக கடத்தி வந்தபோது எல்லை பாதுகாப்பு படையிடம் சிக்கினார். 

அவரையும் போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக, போலீசார் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை லண்டன் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், நேற்று இந்த வழக்கின் இறுதி விசாரணை நடந்தது. 

அந்த விசாரணையில், பல்விந்தர் சிங் மற்றும் ஹர்ஜித் சிங் உள்ளிட்ட இருவரையும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு, இருவருக்கும் தலா ஆறு ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு அளித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

six years prisons to two indian peoples in england


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->