இலங்கையில் பேஸ்புக்,  வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் முடக்கம்.! - Seithipunal
Seithipunal


அண்டை நாடான இலங்கை வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. அத்தியாவசிய பொருட்களுக்கு பெரும்பாலும் இறக்குமதியை நம்பியிருந்த நிலையில், அன்னிய செலவாணி இல்லாததால் இறக்குமதி பாதித்தது.

அதன் காரணமாக அத்தியாவசியப் பொருட்கள் உட்பட உணவுப் பொருட்களுக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும் இலங்கையில் தினமும் 13 மணி நேரம் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த மக்கள் தெருவில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கடந்த 31ஆம் தேதி கொழும்பு நகரில் அதிபர் மாளிகை முன் ஆயிரக்கணக்கானோர் அதிபருக்கு எதிராக நடத்திய போராட்டத்தில் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. கண்ணீர் புகை குண்டுகளை வீசி மக்களை போலீசார் விரட்டியடித்தனர். இந்தப் போராட்டத்தில் பலர் படுகாயமடைந்தனர் 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

அதைத் தொடர்ந்து இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே இலங்கையில் அவசரநிலையை அமல்படுத்தினார். நேற்று மாலை 6 மணி முதல் திங்கட்கிழமை காலை 6 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் தவறான தகவல்களை தடுக்கும் முயற்சியில் ஒரு பகுதியாக நாட்டில் போராட்டங்களை திட்டமிடுவதற்கு மக்களைத் திரட்டுவது தடுக்க சமூக வலைதளங்களை இலங்கை அரசு முடக்கியுள்ளது. இதனால் இலங்கையில் பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் மற்றும் யூடியூப் உள்ளிட்ட அனைத்து சமூக வலைதளங்களை இலங்கை அரசாங்கம் முடக்கியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Social medias are banned in srilanka


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->