வெடித்து சிதறிய கொடூர விமான விபத்து! அடுத்தடுத்து வெளியான காணொளிகள்! 181 பேரின் நிலை என்ன?  - Seithipunal
Seithipunal


தென் கொரியாவின் முவான் சர்வதேச விமான நிலையத்தில், ஓடுபாதையிலிருந்து விலகி தரையில் மோதிய விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இதுவரை 96 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  

இந்த விமானத்தில் மொத்தம் 181 பேர் இருந்தனர், இதில் 175 பயணிகள் மற்றும் ஆறு பணியாளர்கள் அடங்குகின்றனர்.

இந்த விமானம் தாய்லாந்தில் இருந்து தென் கொரியாவின் முவான் விமான நிலையத்துக்கு வந்து கொண்டிருந்தது. சியோலிலிருந்து சுமார் 288 கிலோமீட்டர் தெற்கில் அமைந்துள்ள ஜெயோலா மாகாணத்தில் இந்த விமானம் தரையிறங்க முற்பட்டது.  

தரையிறங்கும் தருணத்தில், விமானம் ஓடுபாதையை விட்டு விலகி சுவர் ஒன்றில் மோதியது. மோதலுக்குப் பின்னர் விமானம் உடைந்து, தீப்பிடித்து வெடித்தது. இதனால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. விபத்தின் இடத்தில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.  

விபத்துக்கான காரணத்தை கண்டறிவதற்காக அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் நிலையில், அடுத்து ஒரு காணொளி வெளியாகியுள்ளது. அதில், விமானத்தின் ஒரு இன்ஜின் தரையிறங்கும் முன் வெடித்து சிதறுவது தெரியவந்துள்ளது. 

இதன் மூலம் இந்த விமான விபத்துக்கான கரணம் கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

South Korea Flight Accident


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->