ஜப்பானில் சர்வதேச கடற்கரை பயிற்சி.! 7 ஆண்டுகளில் முதல் முறையாக தென்கொரியாக பங்கேற்பு.! - Seithipunal
Seithipunal


ஜப்பானில் தலைநகர் டோக்கியோவுக்கு தெற்கே யோகோசுகாவில் உள்ள சுகாமி வளைகுடா பகுதியில் சர்வதேச கடற்படை பயிற்சி நேற்று தொடங்கியது. இதில் இந்தியா, அமெரிக்கா, கனடா, நியூசிலாந்து, சிங்கப்பூர் மற்றும் தென் கொரியா உட்பட 12 நாடுகளில் இருந்து 18 போர்க்கப்பல்கள் பங்கேற்றன.

அதே நேரத்தில் அமெரிக்கா மற்றும் பிரான்சும் போர் விமானங்களை அனுப்பியுள்ளன. மேலும் வட கொரியாவின் அணு ஆயுத மற்றும் ஏவுகணை அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் தென்கொரிய 7 ஆண்டுகளில் முதல் முறையாக ஜப்பானின் சர்வதேச கடற்படை பயிற்சியில் பங்கேற்றுள்ளது.

ஜப்பான் கடற்பகுதியில் பயிற்சியை தொடங்கி வைத்து பேசிய பிரதமர் புமியோ கிஷிடா, கிழக்கு மற்றும் தென் சீனக் கடல்களில், குறிப்பாக ஜப்பானைச் சுற்றி, பாதுகாப்புச் சூழல் பெருகிய முறையில் தீவிரமடைந்து வருகிறது.

வட கொரியாவின் அதிகரித்த ஏவுகணைத் தாக்குதல்கள், கடந்த மாதம் ஜப்பான் மீது பறந்தது உட்பட, ரஷ்ய படையெடுப்பின் தாக்கம் பற்றிய கவலைகள் அதிகரித்து வருகின்றன. சர்ச்சைகளை விலக்கி பேச்சுவார்த்தைகளை நடத்துவது முக்கியம். ஆனால் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கான அச்சுறுத்தல்களுக்கு தயாராக இருப்பதும் அவசியம்.

இதற்காக ஜப்பானின் ராணுவ வலிமையை 5 ஆண்டுகளுக்குள் அதிகரிப்போம். அவசரமாக அதிக போர்க்கப்பல்களை உருவாக்கவும், ஏவுகணை எதிர்ப்பு திறனை வலுப்படுத்தவும், துருப்புக்களின் பணி நிலைமைகளை மேம்படுத்தவும் வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

South Korea participates in Japan fleet review for 1st time in 7 years


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->