மனைவிக்கு வீட்டு வேலை செய்ததற்கு ரூ.1.7 கோடி கணவன் இழப்பீடு தர நீதிமன்றம் உத்தரவு!
Spain court judgment 2023
விவாகரத்து செய்த மனைவி வீட்டு வேலை செய்ததற்காக ரூ.1.7 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று, கணவனுக்கு ஸ்பெயின் நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஸ்பெயின் : இவானா மோரால் என்ற பெண்ணை, திருமணமாகி 25 ஆண்டுகளாக்கு பின்னர், அவரின் கணவர் அவரை விவாகரத்து செய்துள்ளார்.
வயது முதிர்வு உள்ளிட்ட காரணங்களை சுட்டிக்காட்டி, தனக்கு கணவர் இழப்பீடு வழங்க வேண்டும் என்று, அந்நாட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம், "25 ஆண்டுகளாக ஊதியமின்றி இவானா தனது கணவனுக்கும், வீட்டு வேலைகளையும் செய்து வந்ததுள்ளார்.
இதற்காக அவருக்கு குறைந்தபட்ச ஊதிய அடிப்படையில், 25 ஆண்டுகளுக்கு கணக்கிட்டு ரூ.1.7 கோடி ஊதியமாக கணவர் வழங்க வேண்டும்" என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், வீட்டை சுத்தம் செய்வது, கழிவறை சுத்தம் செய்வது, சமைப்பது, சமையலறையை பேணுவது உள்ளிட்ட குடும்ப பணிகளை ஆணும் பெண்ணும் சரிசமமாக பங்கிட்டு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்திய நீதிமன்றம், வீட்டின் பாணிகளை யார் அதிகம் செய்கிறாரோ அவருக்கு ஊதியம் வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.
English Summary
Spain court judgment 2023