நடுவானில் சிலந்தி அட்டகாசம்..விமானியை கடித்ததால் பரபரப்பு !
Spider in mid-air. The pilot was bitten!
நடுவானில் விமானியை சிலந்தி கடித்ததால் ஜெர்மனி-ஸ்பெயின் விமானத்தில் பரபரப்பு ஏற்பட்டது.இந்த சம்பவம் காரணமாக ஐபீரியா ஏர்பஸ் ஏ320 விமானம் மேட்ரிட் விமான நிலையத்தில் சுமார் 3 மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது.
ஐபீரியா ஏர்பஸ் ஏ320 விமானம் ஜெர்மனியின் டசல்டார்ப் நகரத்தில் இருந்து ஸ்பெயின் நாட்டின் மேட்ரிட் நகருக்குசென்றுகொண்டிருந்தது. அப்போது அந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, விமானியை சிலந்தி பூச்சி ஒன்று கடித்ததாக கூறப்படுகிறது.
இதனால் விமானிக்கு கடுமையான அலர்ஜி ஏற்பட்டுள்ளது என தெரிகிறது . இதையடுத்து விமான பணிப்பெண்கள், முதலுதவிப் பெட்டியில் இருந்த மருந்துகளைக் கொண்டு விமானிக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.இதனால் விமானத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
அதனை தொடர்ந்து விமானம் திட்டமிட்டபடி மேட்ரிட் விமான நிலையத்தில் தரையிறங்கியது. இதையடுத்து விமானத்தில் இருந்த அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்ட பின்னர், விமானம் முழுவதும் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது. அலர்ஜியால் பாதிக்கப்பட்ட விமானியின் உடல்நிலை சீராக இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விமானத்தில் ஏற்றப்பட்ட லக்கேஜ் வழியாக சிலந்தி பூச்சி விமானத்திற்குள் நுழைந்திருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் காரணமாக ஐபீரியா ஏர்பஸ் ஏ320 விமானம் மேட்ரிட் விமான நிலையத்தில் சுமார் 3 மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
English Summary
Spider in mid-air. The pilot was bitten!