இனி குழந்தைகள் செல்போன் பயன்படுத்த கடும் கட்டுப்பாடுகள்.. அரசு அதிரடி உத்தரவு.! - Seithipunal
Seithipunal


சீனாவில் குழந்தைகள் செல்போன் பயன்படுத்த கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய காலகட்டத்தில் செல்போன் பயன்படுத்துவது அவசியமாக உள்ளது. சிறு வயது குழந்தைகள் முதல் அனைவரும் செல்போன்களை பயன்படுத்தி வருகின்றனர். இதில் குழந்தைகள் அதிக நேரம் செல்போன் பயன்படுத்துவதால் அவர்களுக்கு தூக்கமின்மை, மனநலம் பாதிக்கப்படுதல் போன்ற பாதிப்புகள் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இதனால் குழந்தைகளிடம் செல்போன் கொடுப்பதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. இந்த நிலையில் சீனாவில் செல்போன்களை குழந்தைகள் பயன்படுத்த கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இதுகுறித்து சீனாவின் கட்டுப்பாட்டாளர் அமைப்பு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி 18 வயதுக்கு உட்பட்டவர்கள் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 2 மணி நேரம் மட்டுமே செல்போன் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்.

மேலும், 8 வயதிற்குட்பட்ட குழந்தைகள் ஒரு நாளைக்கு 40 நிமிடங்களும், 16 வயதிற்குட்பட்ட குழந்தைகள் ஒரு மணி நேரமும், பதினாறு வயது முதல் 17 வயதிற்குட்பட்டவர்கள் 2 மணி நேரம் செல்போன் பயன்படுத்த அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை செல்போன் பயன்படுத்த எந்தவித சேவையும் வழங்கப்பட கூடாது. 18 வயதுக்குட்பட்டவர்கள் செல்போனில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இணையத்தை பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சைபர் பேஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் குழந்தைகளின் வயதை உறுதி செய்வதற்கான அமைப்பும் செல்போனில் இணைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Strict rules for childrens using cellphones in China


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->