திரைப்படங்கள் பார்த்த மாணவர்கள்: கொடூர தண்டனை வழங்கிய வடகொரியா அரசு! - Seithipunal
Seithipunal


வடகொரியாவில் படம், பாடல்கள் பார்த்த மாணவர்களுக்கு 12 ஆண்டுகள் கடின வேலைகள் செய்யும் தண்டனையை அந்நாட்டு அரசு அளித்துள்ளது. 

இது தொடர்பான காணொளி ஒன்றை வடகொரியாவில் இருந்து வெளியேறியவர்களுடன் தொடர்புடைய நிறுவனம் வெளியிட்டுள்ளது. 

தென்கொரியா பாடல்கள் மற்றும் திரைப்படங்களை பார்த்ததாகவும் பரப்பியதாகவும் 16 வயதில் சிறுவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டதை தொடர்ந்து 12 ஆண்டுகளுக்கு கடினமான வேலை செய்யும் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

இணையதளத்தில் பரவும் காணொளியில் 1000 மாணவர்கள் சுற்றி அமர்ந்திருக்கும் பொதுவெளி அரங்கம் ஒன்றில் இரண்டு மாணவர்கள் அரக்கு நிற அங்கி அணிந்து கொண்டு விலங்கு பூட்டப்பட்டு நிலையில் அவர்களுக்கு தண்டனை வழங்கப்படுகிறது.

மேலும் அந்த இடத்தில் உள்ள ஒரு அதிகாரி, இவர்களை வெளிநாட்டு கலாச்சாரம் மயக்கியுள்ளது. அதுவே இவர்களது வாழ்க்கை நாசமாவதற்கு காரணமாகிவிட்டது என தெரிவிக்கிறார். 

தென்கொரியாவின் பொழுதுபோக்கு படைப்புகளை பார்க்கும் வடகொரியாக்களுக்கு இது போன்ற தண்டனை அளிப்பது புதிதல்ல.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Students watched movies North Korea government punishment


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->