திடீர் ராக்கெட் தாக்குதல்! அமெரிக்க படைத்தளம் சேதம்! பலர் படுகாயம்! - Seithipunal
Seithipunal


ஈராக்கின் உள்ள அமெரிக்க படைத்தளம் மீது திடீரென ராக்கெட்  தாக்குதல் நடைபெற்றதால் பலர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாலஸ்தீன நகர்களின் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை பாலஸ்தீன மக்கள் 39 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

90 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து கை, கால்களை இழந்து வீடுகளை இழந்து செய்வதறியாது  பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியே ஈரானில் தலைநகர் தெஹ்ரானில் கடந்த 31ஆம் தேதி கொல்லப்பட்ட சமூகம் மத்திய கிழக்கு மற்றும் இஸ்ரேலுக்கு இடையே பெரும் போர் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

இஸ்ரேல் அமெரிக்காவின் உதவியுடன் இந்த கொலைகளை அரங்கேறி உள்ளதாக ஈரான் குற்றம் சாட்டி வருகிறது. மேலும் இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்கும் என்று ஈரான் எச்சரித்துள்ளது. இந்தப் பிரச்சனைகளுக்கு இடையில் மத்தியில் மற்றொரு மத்திய கிழக்கு நாடான ஈராக்கில் உள்ள அமெரிக்க படைத்தளம் இது இன்று இரவுகளை தாக்குதல் நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஈராக்கின் அல்ஹன்பர் மாகாணத்தில் உள்ள அயின் அல் அசாத் விமான படைத்தளத்தில் அமெரிக்கா படைகள் நிறுத்தப்பட்டுள்ள படைத்தளத்தை குறிவைத்து இன்று ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் பலர் காயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sudden rocket attack on the US military base in Iraq


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->