தற்கொலைப்படை தாக்குதல்..முக்கிய மந்திரி பலி...ஆப்கானிஸ்தானில் பதற்றம்! - Seithipunal
Seithipunal


ஆப்கானிஸ்தானில் அமைச்சர் அலுவலகத்தில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் முக்கியமான மந்திரி ஒருவர் பலியானார்.இதனால் ஆப்கானிஸ்தானில் அங்கு பதற்றம் நிலவுகிறது.

2001,செப்டம்பர் 11 அமெரி்க்காவின் நியூயார்க் நகரில் இரட்டை கோபுரத்தை அல்கொய்தா தீவிரவாதிகள் தகர்த்த போதே தலிபான்கள் ஆட்சிக்கு பிரச்சினை வந்துவிட்டது. அந்தத் தாக்குதலுக்கு காரணமான அல்கொய்தா தீவிரவாதிகளுக்கு ஆப்கானிஸ்தானில் அடைக்கலம் கொடுத்திருந்த தலிபான்கள் மீது அமெரிக்க ராணுவம் போர் தொடுத்து, அவர்களின் ஆட்சியை அகற்றியது. ஜனநாயக ரீதியிலான அதிபர் தேர்தல் நடத்தி புதிய அரசியலமைப்புச் சட்டமும் நிறுவப்பட்டன.

ஆனால் தோல்வி கண்ட தாலிபன்கள் மெல்ல தங்களை பலப்படுத்திக் கொண்டனர், 20 ஆண்டுகள் தலிபான்களுக்கும், அமெரிக்க, நேட்டோ, ஆப்கான் அரசுப் படைகளுக்கும் இடையே நடந்த போரில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டார்கள், லட்சக்கணக்கில் காயமடைந்தனர்.

இறுதிவரை அமெரிக்கா, நேட்டோ படைகளுக்கு முழுமையான வெற்றி கிடைக்காததால், கடந்த மாதம் 31-ம் தேதியோடு ஆப்கனிலிருந்து அமெரி்க்க, நேட்டோ படைகள் முழுமையாக வெளியேறின. அப்போது தலிபான்கள் கட்டுப்பாட்டில் ஆப்கன் முழுமையாக வந்தது.

தற்போது ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில் அகதிகள் விவகாரத்துறை மந்திரியாக செயல்பட்டு வந்தவர் கலில் ஹக்னி.

இந்நிலையில், காபுலில் உள்ள அகதிகள் விவகாரத்துறை அமைச்சக அலுவலகத்தில் இன்று மந்திரி கலில் ஹக்னி வழக்கமான பணிகளை செய்துகொண்டிருந்தார். அப்போது, அமைச்சக அலுவலகத்திற்கு வந்த நபர் தன் உடம்பில் மறைத்து கொண்டுவந்த வெடிகுண்டுகளை வெடிக்கச்செய்தார்.

அலுவலகத்தில் நடந்த இந்த தற்கொலைப்படை தாக்குதலில் மந்திரி கலில் ஹக்னி உயிரிழந்தார். மேலும், அலுவலக ஊழியர்கள் மேலும் 5 பேரும் உயிரிழந்தனர்.

இந்த தற்கொலைப்படை தாக்குதலை தொடர்ந்து அகதிகள் விவகாரத்துறை அமைச்சக அலுவலகத்திற்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த தாக்குதலை நடத்தியது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

உயிரிழந்த மந்திரி கலில் ஹகின் ஆப்கானிஸ்தான் உள்துறை மந்திரி சிராஜுதினின் உறவினர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Suicide attack Chief Minister killed Tension in Afghanistan!


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->