பிரபல நடிகையின் மகன் மர்ம மரணம்..கைதான நண்பர்கள் பரபரப்பு வாக்குமூலம்! - Seithipunal
Seithipunal


பிரபல ஹிந்தி நடிகை சப்னா சிங்யின்  மகன் மர்ம மரணத்தில் அவரது நண்பர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஹிந்தியில் பிரபல தொலைக்காட்சி சீரியல் நிகழ்ச்சியான கிரைம் பேட்ரோல் -இல் நடித்து பிரபலமான  நடிகை சப்னா சிங். இவருக்கு14 வயதில் சாகர் கங்வார் என்ற மகன் இருந்தான். 

 சம்பவத்தன்று உத்தரப் பிரதேசம் பரேலியில் தனது தாய் மாமா ஓம் பிரகாஷுடன் தங்கியிருந்த 8ஆம் வகுப்பு படித்துவரும் சாகர், கடந்த டிசம்பர் 7ஆம் தேதி காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டது. இதற்கிடையே இசத்நகர் பகுதியில் உள்ள அடலாக்கியா கிராமத்திற்கு அருகே அவரது உடல் கடந்த ஞாயிற்றுக்கிழமை வாய்க்காலில் கண்டெடுக்கப்பட்டது.

பிரேத பரிசோதனை அறிக்கையில் மரணத்திற்கான சரியான காரணத்தை உறுதிப்படுத்த முடியவில்லை. ஆனால் விஷம் அல்லது அளவுக்கு அதிகமான போதைப்பொருள் உட்கொண்ட அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளன.

தனது மகனின் மரணத்துக்கு கேட்டு நடிகை சப்னா சிங் உறவினர்களுடன் பரேலி காவல் நிலையத்தின் முன் நேற்று வரை போராட்டம் நடத்தி வந்த நிலையில் போலீசாரின் வாக்குறுதியை அடுத்து போராட்டத்தை நிறுத்த உடன்பட்டார்.

 இந்நிலையில் இன்று [புதன்கிழமை], சாகரின் நண்பர்களான அனுஜ் மற்றும் சன்னி என அடையாளம் காணப்பட்ட இருவரை, கொலைக் குற்றச்சாட்டின் பேரில் போலீஸார் கைது செய்தனர். அனுஜும் சன்னியும் சாகருடன் போதைப்பொருள் மற்றும் மது அருந்தியதாக விசாரணையின்போது ஒப்புக்கொண்டனர்.

அளவுக்கு அதிகமாக அருந்தியதால் சாகர் மயங்கி விழுந்தான் என்றும் பீதியடைந்த அவர்கள் அவனது உடலை வயல்வெளிக்கு இழுத்துச் சென்றுவிட்டனர் என்றும் வாக்குமூலம் அழித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Famous actress's son found dead under mysterious circumstances Arrested friends confess


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->