கனமழை எதிரொலி... அரையாண்டுத் தேர்வு ஒத்திவைப்பு! - Seithipunal
Seithipunal


கனமழை காரணமாக விடுமுறை விடப்பட்ட மாவட்டங்களில் மட்டும் இன்று நடைபெறவிருந்த அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.


தென் மேற்கு, அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று இலங்கை-தமிழக கடலோரப் பகுதிகளை அடையும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெற வாய்ப்பில்லை என அறிவித்துள்ள வானிலை ஆய்வு மையம் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவித்திருந்தது.

இந்த நிலையில், தொடர் மழை மற்றும் கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவாரூர், ராமநாதபுரம், திண்டுக்கல், விழுப்புரம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், கடலூர், அரியலூர், ராணிப்பேட்டை, கரூர், வேலூர், தூத்துக்குடி, திருப்பத்தூர் மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, திருநெல்வேலி மாவட்டத்தில் 1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து கனமழை காரணமாக விடுமுறை விடப்பட்ட மாவட்டங்களில் மட்டும் இன்று நடைபெறவிருந்த அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார். மேலும் ஒத்திவைக்கப்பட்ட அரையாண்டு தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என கூறியுள்ளார்.

6 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று ஆங்கிலத்தேர்வு நடைபெற இருந்தது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Heavy Rain Echoes Half-yearly exams postponed


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->