விஜய் தேவரகொண்டாவுடன் ராஷ்மிகா ரகசிய நிச்சயதார்த்தம்? இணையத்தில் வைரல்! - Seithipunal
Seithipunal



ராஷ்மிகாவுக்கும், விஜய் தேவரகொண்டாவுக்கும் ரகசியமாக நிச்சயதார்த்தம் முடிந்து உள்ளதாகவும், இவர்கள் திருமணம் ஆறு மாதங்களுக்கு பிறகு நடைபெற இருப்பதாகவும் தெலுங்கு இணைய தளங்களில் தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும்  ராஷ்மிகா மந்தனா. தமிழில் 'சுல்தான்', 'வாரிசு' படங்களிலும் தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் சமீபத்தில் பான் இந்தியா அளவில் வெளியான 'புஷ்பா 2' படம் மிகப்பெரிய வசூல் சாதனையை நிகழ்த்தி உள்ளது.

இதற்கிடையில் ராஷ்மிகா மந்தனாவும், தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவும் காதலிப்பதாக தொடர்ந்து கிசுகிசுக்கள் வருகின்றன. இருவரும் ஜோடியாக சுற்றும் புகைப்படங்களும், ஓட்டல்களில் ஒன்றாக அமர்ந்து உணவருந்தும் படங்களும் வெளியானதை பார்த்து பலரும் காதலை உறுதிப்படுத்தி பேசினர். விஜய் தேவரகொண்டாவின் வீட்டு நிகழ்ச்சிகளில் ராஷ்மிகா தவறாமல் கலந்து கொள்கிறார். 'புஷ்பா 2' படம் பார்க்கவும் விஜய்தேவரகொண்டா குடும்பத்தினருடன் ராஷ்மிகா தியேட்டருக்கு சென்ற வீடியோவும் வெளியானது.

இவர்கள் ஏற்கனவே 'கீதம் கோவிந்தம், டியர் காம்ரே'ட் ஆகிய படங்களில் இணைந்து நடித்திருந்தனர். இதற்கிடையில், இவர்களின் திருமணம் குறித்த தகவல் ஒன்று சமூக வலைத்தளத்தில் தீயாக பரவி வருகிறது. அதே போல் சென்னையில் நடந்த, புஷ்பா 2 படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் 'நீங்கள் திருமணம் செய்து கொள்ள உள்ளவர் ஒரு நடிகரா? என தொகுப்பாளர் கேட்டதற்கு இது எல்லாருக்குமே தெரிந்தது தான் என கூறி, விஜய் தேவரகொண்டா உடனான காதலை மறைமுகமாக வெளிப்படுத்தினார்.

இந்த நிலையில் ராஷ்மிகாவுக்கும், விஜய் தேவரகொண்டாவுக்கும் ரகசியமாக நிச்சயதார்த்தம் முடிந்து உள்ளதாகவும், இவர்கள் திருமணம் ஆறு மாதங்களுக்கு பிறகு நடைபெற இருப்பதாகவும் தெலுங்கு இணைய தளங்களில் தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rashmika to get engaged to Vijay Deverakonda Viral on the Internet


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->