தனுஷின் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படம் எப்போது ரிலீஸ் தெரியுமா?
nilavukku yen mel yennadi kobam movie release update
'பவர் பாண்டி' படம் மூலம் இயக்குனராக அறிமுகமான தனுஷ் தனது 50-வது திரைப்படமான 'ராயன்' படத்தை தானே இயக்கி நடித்தார். இந்தத் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் தனுஷ் இயக்கத்தில் மூன்றாவது திரைப்படமாக 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' படம் உருவாகியுள்ளது.
இந்தப் படத்தின் மூலம் தனுஷின் சகோதரி மகன் பவிஷ் கதாநாயகனாக அறிமுகமாகிறார். மேலும், இப்படத்தில் அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மேத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன் உட்பட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்தப் படத்தை வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரித்துள்ளது.
இந்த படத்தின் முதல் பாடலாக 'கோல்டன் ஸ்பாரோ' பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து இரண்டாவது பாடலாக 'காதல் பெயில்' என்ற பாடல் வெளியானது. இந்த நிலையில் தனுஷ் இயக்கியுள்ள 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இப்படம் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் 7-ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட்ஸ் மூவீஸ் நிறுவனம் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary
nilavukku yen mel yennadi kobam movie release update