6 நாட்களில் ரூ.1000 கோடி - பட்டையை கிளப்பிய புஷ்பா 2 படம்.!
pushpa 2 movie 1000 crores collect six days
கடந்த 2021-ம் ஆண்டு சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான படம் 'புஷ்பா தி ரைஸ்'. இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, பிரம்மாண்ட பொருட்செலவில் 'புஷ்பா 2 தி ரூல்' படம் உருவாகியுள்ளது. கடந்த 5-ந் தேதி வெளியான இந்தப் படம் வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தை மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்க, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். மேலும் சாம் சி எஸ் இந்தப் படத்திற்கு பின்னணி இசை அமைத்திருந்தார்.
தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியான இந்தப் படம் முதல் நாளில் இருந்தே வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது. அதாவது 6 நாட்களில் ரூ.1002 கோடி வசூல் செய்துள்ளது.
அதிலும் குறிப்பாக தமிழ் நாட்டில் மட்டும், புஷ்பா 2 படம் 6 நாட்களில் ரூ. 50 கோடி வசூல் செய்துள்ளது. இந்தப்படம் இந்திய சினிமா வரலாற்றில் ரிலீஸான 6 நாட்களிலேயே விரைவாக ரூ.1000 கோடி வசூல் செய்த முதல் படம் என்கிற சாதனை படைத்திருக்கிறது.
English Summary
pushpa 2 movie 1000 crores collect six days