சென்னையில் விட்டு விட்டு வெளுத்துவாங்கபோகும் கனமழை!பிரதீப் ஜான் கணிப்பு! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் தென் மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது தீவிரமாக வடிவெடுத்து, இலங்கை கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டு உள்ளது.

இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று இலங்கை-தமிழக கடலோரப் பகுதிகளை அடையும் எனவும், புயலாக வலுப்பெற வாய்ப்பில்லை எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் தாக்கத்தால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை நீடித்து வருகிறது. சென்னையில் நேற்று நள்ளிரவுக்கு முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. பெரும்பாலான இடங்களில் 70 மில்லி மீட்டர் மழை அளவுக்கு மேல் பதிவாகியுள்ளதாக தகவல்.

தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் கூறுகையில், சென்னையை நோக்கி மேகங்கள் நகர்ந்து வருவதால், மழை விட்டுவிட்டு தொடரும் என்று தெரிவித்துள்ளார். அதேசமயம், தென் தமிழகத்தில் இன்று இரவு முதல் கனமழை அதிகம் பதிவாகும் வாய்ப்புகள் உள்ளன.

காற்றழுத்த தாழ்வு பகுதி அரபிக்கடலுக்கு நகர்ந்தபிறகு மழை குறையும் எனவும், இதனை ஃபெஞ்சல் புயலுடன் ஒப்பிடக்கூடாது என்றும் பிரதீப் ஜான் விளக்கமளித்துள்ளார்.

இந்த மழை நிலைக்கு ஏற்ப பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Heavy rain will leave Chennai white Pradeep John prediction


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->