வானத்தில் சிக்கி தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்! பூமிக்கு திரும்பி வருவதில் மீண்டும் சிக்கல்!
Sunita Williams It takes a month to return to Earth
தொழில்நுட்பக்கோளாறு காரணமாக சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்பி வர ஒரு மாத காலம் ஆகலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் கடந்த ஜூன் 5ஆம் தேதி போயிங் நிறுவனம் உருவாக்கிய ஸ்டார்லைனர் விண்கலத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு புறப்பட்டார்.
சுனிதா வில்லியம்ஸ் உடன் சகவிண்வெளிவீரர் புட்ச் வில்மோடன் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 7ம் தேதி விண்வெளி நிலையத்தை இருவரும் சென்றடைந்தனர்.
ஜூன் 14ஆம் தேதி பூமிக்கு திரும்பி வர திட்டமிடப்பட்டிருந்த நிலையில், ஸ்டார் லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட வாயு கசிவு மற்றும் உந்து இசைக்கருவியில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோடன் பூமிக்கு திரும்பி வரும் பயணம் ஒரு வாரத்திற்கு தள்ளி வைக்கப்பட்டது.
தற்போது ஸ்டார் லைனில் தொழில்நுட்பக் கோளாறுகள் இன்னும் சரி செய்யப்படாததால் பூமிக்கு திரும்ப முடியாமல் சர்வதேச விண்வெளி மையத்தில் இருவரும் சிக்கி தவித்து வருகின்றனர்.
ஸ்டார் லைனர் விண்கலத்தில் வாயு கசிவு தொழில்நுட்பக் கோளாறுகளை சரி செய்ய குறைந்தது 30 நாட்களுக்கும் மேல் ஆகும் எனக் கூறப்படுகிறது. இதனால் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோடன் பூமிக்கு திரும்பி வர இன்னும் ஒரு மாத காலம் ஆகலாம் என்று கூறப்படுகிறது.
English Summary
Sunita Williams It takes a month to return to Earth