"மைப்பிரிஸ்டோன்" கருக்கலைப்பு மருந்துகளை பயன்படுத்த சுப்ரீம் கோர்ட்டு அனுமதி..! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவில் கடந்த 50 ஆண்டுகளாக கருக்கலைப்பு சட்டம் அமலில் இருந்த நிலையில், கடந்த ஆண்டு முறையற்ற கருக்கலைப்புகளை தடுக்க பெண்களுக்கு கருக்கலைப்பிற்கான உரிமையை அமெரிக்கா உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. மேலும் கருக்கலைப்பிற்கு பயன்படுத்தப்படும் மைப்பிரிஸ்டோன் மருந்துகளை விற்பதற்கும் தடை விதிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து நாடு முழுவதும் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உட்பட பல்வேறு தலைவர்கள் உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு அதிருப்தியை தெரிவித்தனர். இதையடுத்து மைப்பிரிஸ்டோன் மருந்தை உற்பத்தி செய்யும் டான்கோ லேபரட்டரீஸ் நிறுவனம், 56 லட்சம் அமெரிக்கர்கள் இந்த மருந்தை பயன்படுத்தி உள்ளதாக கூறி நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தது.

இந்நிலையில் கருக்கலைப்பு சட்டத்தை ரத்து செய்யும் திர்ப்பை திரும்ப பெறுவதாகவும், கருக்கலைப்பு சார்பான முடிவுகளை எடுக்க நீண்ட கால அவகாசம் தேவைப்படும் எனவும் அமெரிக்கா உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் கருக்கலைப்பிற்கு உதவும் மைப்பிரிஸ்டோன் மருந்துகளை உபயோகிக்கவும், விற்பனை செய்யவும் அனுமதி அளிப்பதாகவும், மருந்து தொடர்பான கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Supreme court allows to use of Mifepriston abortion medicine in america


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->