அபூர்வ சூரிய கிரகணம்: இந்த கிரகணம் தமிழ்நாட்டிற்கு மட்டும் ஸ்பெஷல்.!
suriya kiraganam special
இந்தாண்டு (2019) வரும் டிசம்பர் மாதம் 26ஆம் தேதி சென்னை நேரப்படி காலை 08.08 மணி முதல் காலை 11.19 மணி வரை சூரிய கிரகணம் நடைபெறவுள்ளது.
இந்தியாவில் கர்நாடக மாநிலத்தின் தென்பகுதி மற்றும் தமிழ்நாட்டிலும், கேரளாவின் வடபகுதியிலும் இந்த சூரிய கிரகணத்தை பார்க்க முடியும். மற்ற பகுதிகளை விட தமிழகத்தில்தான், அதிக அளவில் இந்த அபூர்வ சூரிய கிரகணத்தை பார்க்க முடியும். இந்த சூரிய கிரகணத்தைப் பார்க்க தமிழகத்தில் 11 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கின்றது.
குறிப்பாக கோவை, ஈரோடு, புதுக்கோட்டை, திருச்சி, நீலகிரி, கரூர், திண்டுக்கல், திருப்பூர், சிவகங்கை மற்றும் மதுரை ஆகிய 10 மாவட்டங்களில் இந்த அபூர்வ சூரிய கிரகணம் முழுமையாக தெரியும். மற்ற இடங்களில் பகுதி சூரிய கிரகணத்தை பார்க்க முடியும்.
தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் செயல் இயக்குனர் இதுகுறித்து, ”இந்த சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கக்கூடாது என்றும், அதற்கென்று இருக்கும் கண்ணாடி வழியாக மட்டும் தான் பார்க்க வேண்டும். அதற்காக தமிழகத்தில் முழு சூரிய கிரகணம் தெரியும் 10 இடங்களிலும், பகுதியாக தெரியும் சென்னையிலும் பார்க்குமாறு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சூரிய கிரகணம் வரும் நேரத்தில் வெளியில் செல்லக்கூடாது எனசொல்வது தவறு என்றும், கிரகணத்தின்போது வெளியே செல்லலாம், சாப்பிடலாம், கர்ப்பிணி பெண்களும் இயல்பாகவும் இருக்கலாம். இதற்கு பிறகு 2020-ம் ஆண்டு அரியானா மற்றும் பஞ்சாப் மாநிலத்திலும், அதற்கு அடுத்தபடியாக 2031-ம் ஆண்டு ஏற்படும் கிரகணத்தை தமிழ்நாட்டில் மதுரை மற்றும் தேனியிலும் பார்க்க முடியும்” என்று கூறியுள்ளார்.