இலங்கை: ஈஸ்டர் குண்டு வெடிப்பில் சந்தேக நபர் படுகொலை.! - Seithipunal
Seithipunal


கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இலங்கையில் ஈஸ்டர் ஞாயிறு அன்று தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்கள் உள்பட 8 இடங்களில் அடுத்தடுத்து நடந்த பயங்கர குண்டு வெடிப்பு சம்பவங்களில் வெளிநாட்டினர்கள் உள்பட 265 பேர் உயிரிழந்தனர். மேலும் 500-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். 

இந்நிலையில் இந்த பயங்கரவாத தாக்குலில் தொடர்புடையதாக கூறி இலங்கையின் மட்டக்குளியா நகரை சேர்ந்த 38 வயதான முகமது பதுர்தீன் முகமது ஹர்னாஸ் என்பவர் கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து அவர் பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லாததால் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட பதுர்தீன், நேற்று முன்தினம் தனது வீட்டில் இருந்தபோது காலை 10 மணி அளவில் காரில் வந்த மர்ம நபர்கள் சிலர் அவரை கூர்மையான ஆயுதங்களால் சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.

இதில் பலத்த காயமடைந்த பதுர்தீனை அவரது குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Suspect killed in Sri Lankan Easter bombings


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->