சிரியா உள்நாட்டு போர்; அரசு படைகள் நடத்திய தாக்குதலில் 340 மேற்பட்டோர் அப்பாவி பொதுமக்கள் உயிரிழப்பு..!
Syria Civil War More than 340 innocent civilians killed in government attacks
சிரியாவில் முன்னாள் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆதரவாளர்களுக்கும், அரசுக்கு ஆதரவான படைகளுக்கும் இடையே கடந்த 06 ஆம் தர்தியில் இருந்து மோதல் வலு பெற்றுள்ளது. ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் அமைப்பின் தலைமையிலான கிளர்ச்சிக் குழுக்களால் அசாத்தின் அரசாங்கம் கடந்த டிசம்பர் மாத தொடக்கத்தில் கவிழ்க்கப்பட்டது. மண்ணிலிருந்து இரு தரப்பினருக்கும் இடையே மோதல்கள் நிகழ்ந்து வருகின்றன.
இந்நிலையில், கடந்த 06 ஆம் தேதி முதல் மோதல் தீவிரமடைந்துள்ளதாக சிரியா செய்திகள் தெரிவிக்கின்றன. அதாவது, சிரியாவின் கடலோர மாகாணமான லடாகியாவில் உள்ள ஜப்லே நகரில் நேற்று வன்முறை வெடித்தது. அங்குள்ள மூன்று கிராமங்களில் ஆயுதமேந்திய ஆசாத் ஆதரவு குழுவினரை அரசு ஆதரவு படைகள் வெளியேற்ற முயன்றனர். அப்போது நடந்த மோதலில் ஒரே நாளில் 70 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

அத்துடன், சிரிய அரசு ஆதரவு படையினரும் அதனுடன் தொடர்புடைய ஆயுதக் குழுக்களும் கடந்த இரண்டு நாட்களில் 340க்கும் மேற்பட்ட பொதுமக்களைக் கொல்லப்பட்டுள்ளதாக பிரிட்டனை தளமாகக் கொண்ட சிரிய மனித உரிமைகள் கண்காணிப்பகம் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது.
இவ்வாறு கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலோர் அந்நாட்டில் உள்ள அலவைட் சிறுபான்மை இனத்தை சேர்ந்தவர்கள் என்று சிரிய மனித உரிமைகள் கண்காணிப்பக அதிகாரி ராமி அப்துல் ரஹ்மான் நேற்று (சனிக்கிழமை) ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
English Summary
Syria Civil War More than 340 innocent civilians killed in government attacks