தைவானில் கடுமையான நிலநடுக்கம்: பீதியில் மக்கள்.!
Taiwan earthquake
கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான தைவானில் சமீப காலமாக அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகிறது. இந்நிலையில் தைவான் கிழக்கு கடற்கரை பகுதியில் இன்றும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இன்று மாலை 5:45 மணியளவில் ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.3 அலகுகளாக பதிவாகி உள்ளதாக தேசிய நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
சுமார் 20 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட சேதங்கள் குறித்து எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை. இருப்பினும் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.