ஜனநாயகத்தை காப்பதே ஆயுதப்படைகளின் முக்கிய பணி - தைவான் அதிபர்
Taiwan president says Protecting democracy is big work
சீனா-தைவான் இடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், தைவான் அதிபர் சாய் இங்-வென் வரும் புதன்கிழமை உயர் மட்ட கூட்டத்தில் பங்கேற்க அரசு முறை பயணமாக அமெரிக்கா செல்கிறார். மேலும் பயணத்தின் பொழுது அமெரிக்க அதிபருடன் சீன விவகாரம் குறித்து விவாதிக்கப்படலாம் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் அமெரிக்க பயணத்திற்கு முன்பாக தைவான் அதிபர் இன்று ராணுவப் பொறியாளர்களைச் சந்தித்து அவர்களின் பயிற்சி குறித்து ஆய்வு செய்தார். பின்பு அவர்களிடையே உரையாற்றியதில் ஜனநாயகத்தை காப்பதே ஆயுதப் படைகளின் முக்கிய பணி என்றும், நாட்டின் இறையாண்மையை பாதுகாக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இதையடுத்து ராணுவ போர் பயிற்சியை தொடர்ந்து பயிற்றுவிப்பதன் மூலமும், பலப்படுத்துவதன் மூலமும் நமது வீட்டையும், நமது நாட்டைப் பாதுகாக்கவும் முடியும் என்று தெரிவித்துள்ளார். மேலும் தைவான்-சீனா எல்லை பகுதிகளில் போர் பதற்றம் இருக்கும் நிலையில் தைவான் அதிபரின் அமெரிக்கா பயணம் முக்கியத்துவம் வந்ததாக கருதப்படுகிறது.
English Summary
Taiwan president says Protecting democracy is big work