இசைக்குத் தடை விதித்த தலிபான்கள் - ஆப்கானிஸ்தானில் தொடரும் அட்டூழியம்.! - Seithipunal
Seithipunal


இசைக்குத் தடை விதித்த தலிபான்கள் - ஆப்கானிஸ்தானில் தொடரும் அட்டூழியம்.!

தலிபான்கள் ஆட்சி செய்யும் ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு எதிராக பல தடைகளை அரசு விதித்துள்ளது. அந்த வகையில், சினிமா, பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கும், பொது இடங்களில் இசையை இசைப்பதற்கும் கடுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள ஹெராத் மாகாணத்தில் இசை ஒழுக்கக்கேடானதாகக் கருதி, பறிமுதல் செய்யப்பட்ட இசைக்கருவிகள் மற்றும் அது சார்ந்த உபகரணங்களை தலிபான்கள் தீயிட்டு எரித்தன. 

இந்த சம்பவம் தொடர்பாக, நல்லொழுக்கத்தை மேம்படுத்துதல் மற்றும் தடுப்பு அமைச்சகத்தின் ஹெராத் துறையின் தலைவர் அஜிஸ் அல்-ரஹ்மான் அல்-முஹாஜிர் தெரிவித்ததாவது, "இசையை ஊக்குவிப்பது தார்மீக ஊழலை ஏற்படுத்துகிறது. அதை இசைப்பது இளைஞர்களை வழிதவறச் செய்யும்" என்று தெரிவித்தார்.

இதைதொடர்ந்து, நேற்று முன்தினம் நூற்றுக்கணக்கான டாலர்கள் மதிப்புள்ள இசைக்கருவிகள் மற்றும் உபகரணங்களை தலிபான் அதிகாரிகள் எரித்தனர். இதில் ஒரு கிட்டார், மற்ற இரண்டு கம்பி வாத்தியங்கள், ஒரு ஹார்மோனியம் மற்றும் ஒரு தபேலா, ஒரு வகை டிரம் அத்துடன் ஒலி பெருக்கிகள் உள்ளிட்டவை இருந்தது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

taliban ban music in afganisthan


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->